மண்ணச்சநல்லூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கதிரவனுக்கு ஆரத்தி எடுத்து பெண்கள் உற்சாக வரவேற்பு


வேட்பாளர் எஸ்.கதிரவனுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்த காட்சி.
x
வேட்பாளர் எஸ்.கதிரவனுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்த காட்சி.
தினத்தந்தி 28 March 2021 9:30 AM IST (Updated: 28 March 2021 9:31 AM IST)
t-max-icont-min-icon

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் எஸ்.கதிரவன் நேற்று முசிறி மேற்கு, கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட ஜெயங்கொண்டான், ராசிபுரம், மேல புதுமங்கலம், கீழமங்கலம், திருத்தலையூர், புதுப்பட்டி, வெங்கடாசல புரம், வில்லியனூர், வாழவந்தி, ஜம்புநாதன் உள்ளிட்ட பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பெண்கள் நீண்ட வரிசையில் நின்று வேட்பாளர் எஸ்.கதிரவனுக்கு ஆரத்தி எடுத்து மலர் தூவி வரவேற்றனர். பதிலுக்கு பெண் வாக்காளர்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் தன் கையில் வைத்திருந்த மலர்களை தூவி வாக்கு சேகரித்தார். இளைஞர்கள் பட்டாசு வெடித்து கதிரவனை வரவேற்றனர். 

பின்னர் அவர் பொதுமக்களிடம் பேசியதாவது:- 
எனக்கு ஓட்டு போட்டு எம்.எல்.ஏ., ஆக்கினால் உங்களுக்கு என்ன லாபம்னு கேக்குறீங்களா? உங்களின் நீண்ட நாள்  கோரிக்கையான  குடிநீர்  பிரச்சனையை சரி செய்வேன், வேலை வாய்ப்பை உருவாக்கி தருவேன் என்று உறுதியளித்தார். மேலும் மற்ற எம்.எல்.ஏ.  போல் அல்லாமல் நான் தொகுதிக்கு 3 மாதத்திற்கு ஒருமுறை உங்களை வந்துபார்த்து உங்கள் கோரிக்கையை 
நிறைவேற்றித்தருவேன் என உறுதி கூறினார். மற்றவர்கள் செய்த தவறை நான் செய்யமாட்டேன் என்று மக்களிடம் உறுதி அளித்தார்.  பலபேர் சொன்னார்கள் 10 வருடமாக எந்த எம்.எல்.ஏ.வும் தொகுதி பக்கம் வந்தது இல்லை என்று கூறினார்கள். நான் உறுதிபடக் கூறுகிறேன், நான் மற்றவர்களைப் போல் இல்லாமல் 3 மாதத்திற்கு ஒரு முறை உங்களை ஒவ்வொரு வரையும் சந்தித்து பேசுகிறேன். 

உங்கள் மனதில் நிரந்தரமாக இடம்பிடிக்க நான் ஆசைப்படுகிறேன். நான் வெற்றி பெறுவதன் மூலம் மு.க.ஸ்டாலின் முதல்- அமைச்சர் ஆவார். 
மு.க.ஸ்டாலின் முதல் வரானால் அவர் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறை வேற்றுவார். அப்போது நீங்கள் அனைவரும் பயன் பெறுவீர்கள். இவ்வாறு அவர் பேசினார். 

உடன் ஒன்றியச் செய லாளர்கள் காட்டுக்குளம் கணேசன் மற்றும் ராமச்சந்திரன் கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story