கிருஷ்ணராயபுரம் தொகுதியில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்வேன்; அ.தி.மு.க. வேட்பாளர் தானேஷ் என்கிற முத்துக்குமார் பேச்சு
கிருஷ்ணராயபுரம் (தனி) சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தானேஷ் என்கிற முத்துக்குமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில் நேற்று புலியூர், மேலபாளையம், பி.வெள்ளாளப்பட்டி உள்பட பல்வேறு கிராமங்களுக்கு வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.
மேலும் அப்பகுதியில் உள்ள வயலில் வேலை செய்யும் பெண்களின் காலை தொட்டு வணங்கி வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
வருகிற சட்டமன்ற தேர்தலில் எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வேண்டுமென உங்கள் பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன்.பொதுமக்களாகிய உங்களை அடிக்கடி சந்தித்து
குறைகளை கேட்டறிந்து, அதனை நிவர்த்தி செய்வேன். இதுவரை எந்த மாநிலத்திலும் அறிவிக்காத திட்டங்களை அறிவித்து, மக்களுக்காக அந்த திட்டங்களை செயல்படுத்தியவர் தான் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,500 வழங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த தொகை இல்லத் தரசிகளுக்கு பெரிதும் பயன்பெறும். மேலும் வருடத்திற்கு விலையில்லாமல் 6 கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும். எனவே தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் 3-வது முறையாக அ.தி.மு.க. அரசு அமைந்தவுடன் நிச்சயம் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story