கண்ணனாற்றில் புதிய பாலம் கட்டப்படும்; பட்டுக்கோட்டை தொகுதி த.மா.கா. வேட்பாளர் என்.ஆர்.ரெங்கராஜன் வாக்குறுதி
மதுக்கூர் கண்ணனாற்றில் புதிய பாலம் கட்டப்படும் என்று த.மா.கா. வேட்பாளர் என்.ஆர்.ரெங்கராஜன் வாக்குறுதி அளித்தார்.
த.மா.கா. வேட்பாளர் பிரசாரம்
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதி களில் வேட்பாளர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சட்டசபை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் த.மா.கா. வேட்பாளர் என்.ஆர்.ரெங்கராஜன் போட்டியிடுகிறார். அவர் பட்டுக்கோட்டை தொகுதியில் கூட்டணி கட்சியினருடன் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.அதன்படி நேற்று என்.ஆர்.ரெங்கராஜன், மதுக்கூர் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கன்னியாகுறிச்சி பாலோஜி, கரிச்சான் கோட்டை, மூங்கில் ஓடை ஆதிதிராவிடர் தெரு, சொக்கனூர் முத்தரையர் தெரு, புளியகுடி, பெரியகோட்டை மெயின் ரோடு, பிள்ளையார் கோவில் தெரு, ஆகிய இடங்களில் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார்.
புதிய பாலம் கட்டப்படும்
அதைத்தொடந்து கோபாலசமுத்திரம் வெட்டிக்காடு, மதுரபாசானியபுரம், காடந்தங்குடி, காரப்பங்காடு, சிரமேல்குடி, கல்யாண ஓடை, பழவேறிக்காடு, சிவிகாடு அத்திவெட்டி பூசாரி காடு, பிச்சினிக்காடு, விக்ரம் வாடியகாடு, இளங்காடு வாட்டாகுடி உக்கடை போன்ற பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார்.
அப்போது வேட்பாளர் என்.ஆர்.ரெங்கராஜன் பேசுகையில், மதுக்கூர் சொக்கனாவூர் புதிய பாலங்கள் முழுமையாக கட்டப்படும். மதுக்கூர் கண்ணனாற்றில் புதிய பாலம் கட்டப்படும்.பட்டுக்கோட்டை தொகுதி களில் விவசாயிகளின் கோரிக்கை களை நிறைவேற்ற தமிழக சட்டசபையில்
தொடர்ந்து பாடுபடுவேன். தொகுதி மக்கள் தங்கள் கோரிக்கை குறித்து எந்த நேரத்திலும் என்னை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். பட்டுக்கோட்டை தொகுதியில் விடுபட்ட பல திட்டங்களை நிறை வேற்றவும், புதிய திட்டங் களை செயல்படுத்தவும் எனக்கு மீண்டும் ஒரு முறை வெற்றியை தாருங்கள் என கூறினார்.
வேட்பாளருடன் சி.வி.சேகர் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், மலைஅய்யன், ஒன்றிய செயலாளர்கள் துரை.செந்தில், தண்டபாணி, பா.ஜனதா கட்சி சார்பில் வக்கீல் முரளி கணேஷ், வரதராஜன், அன்பு, த.மா.கா. சார்பில் மதுக்கூர் வட்டார தலைவர் ரவிச்சந்திரன், புஷ்பநாதன், திருவேங்கடம், புகழேந்தி, அத்தி செந்தில், பா.ம.க. சார்பில் தியாகராஜன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், ஒன்றிய கவுன்சிலர்கள், பொதுமக்கள் சென்று வாக்கு சேகரித்தனர்.
Related Tags :
Next Story