திருவாரூர் தொகுதியில் வளர்ச்சி பணிகள் துரிதப்படுத்தப்படும்; அ.தி.மு.க.வேட்பாளர் ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம் உறுதி


திருவாரூர் தொகுதியில் வளர்ச்சி பணிகள் துரிதப்படுத்தப்படும்; அ.தி.மு.க.வேட்பாளர் ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம் உறுதி
x
தினத்தந்தி 28 March 2021 11:30 AM IST (Updated: 28 March 2021 11:24 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் தொகுதியில் வளர்ச்சி பணிகள் துரிதப்படுத்தப்படும் என்று அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.என்.ஆர். பன்னீர்செல்வம் உறுதி அளித்தார்.

வீடு, வீடாக சென்று வாக்குசேகரிப்பு
திருவாரூர் சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். கொரடாச்சேரி ஒன்றியத்தில் கொரடாச்சேரி, 
பத்தூர் மேல்கரை, உத்தரங்குடி, கீழப்பாலையூர், சிட்டிலிங்கம் உள்ளிட்ட இடங்களில் வீடு, வீடாக சென்று  ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம் வாக்கு சேகரித்தார். 

வாக்கு சேகரிப்பின் போது அவர்  கூறியதாவது:-

அம்மா மினி கிளினிக் 
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில் அ.தி.மு.க. அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். கிராமங்கள் தோறும் அம்மா மினி கிளினிக் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் கிராமப்புற மக்கள் உடனடி மருத்துவ சேவையினை எளிதாக பெற்று வருகின்றனர். இந்த திட்டம் அனைத்து தரப்பினரின் வரவேற்பையும் பெற்றுள்ளது. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் அனைத்து வீடுகளுக்கும் ஆண்டிற்கு 6 கியாஸ் சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும். மேலும் ஒவ்வொரு வீட்டிற்கும் சூரிய மின்அடுப்பு வழங்கப்படும். 

வளர்ச்சி பணிகள் துரிதப்படுத்தப்படும்
குடும்ப தலைவிகளுக்கு மாத உதவித்தொகையாக ரூ.1500 வழங்கப்படும். வீட்டிற்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்ேவறு வாக்குறுதிகள் அ.தி.மு.க.வால் அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் இந்த வாக்குறுதிகள் உடனடியாக நிறைவேற்றப்படும். திருவாரூர் சட்டசபை தொகுதியின் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றி  தருவேன். ஏற்கனவே ஒருமுறை வேட்பாளராக போட்டியிட்டு உங்களால் தோற்கடிக்கப்பட்டேன். நீங்கள் என்னை தோற்கடித்தாலும் உங்களிடத்தில் மீண்டும் மீண்டும் வாக்கு கேட்டு வந்துள்ளேன். நான் சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் திருவாரூர் தொகுதியில் வளர்ச்சி பணிகள் துரிதப்படுத்தப்படும். திருவாரூர் தொகுதியில் பொது அமைதிக்கு என்னால் எந்த பங்கமும் வராது. உங்களோடு 
ஒருவராக உங்கள் வீட்டு பிள்ளையாக, உங்கள் சகோதரனாக இருந்து உங்களுக்காக உழைப்பேன். எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

அப்போது கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Next Story