காந்தி மார்க்கெட்டை நவீனப்படுத்த நடவடிக்கை எடுப்பேன்; திருச்சி கிழக்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் இனிகோ இருதயராஜ் உறுதி
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் இனிகோ இருதயராஜ் நேற்று காலை சிந்தாமணி அண்ணாசிலை பகுதியைச் சேர்ந்த வெனிஸ்நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.
மாலையில் 19-வது வார்டு பகுதி ஜெயில் பேட்டை பகுதியில் வியாபாரிகள் மற்றும் பொது மக்களிடம் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் தனக்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்டார். அப்போது தன்னை சந்தித்த வியாபாரிகள் மற்றும் பொது மக்களிடம் வாக்குறுதி அளித்து இனிகோ இருதயராஜ் கூறியதாவது:-
திருச்சி காந்தி மார்க்கெட் என்பது திருச்சியின் முக்கியமான ஒரு அடையாளம். இந்த காந்தி மார்க்கெட்டை நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆதலால் காந்தி மார்க்கெட் எக்காரணத்தை கொண்டும் இடமாற்றம் செய்யப்படாது. காந்தி மார்க்கெட் அருகில் உள்ள மகளிர் சிறைச்சாலையை நகரின் வெளிேய கொண்டு சென்று அந்த இடத்தையும் காந்தி மார்க்கெட்டோடு சேர்த்து அங்கு வாழைக்காய் மண்டி, இறைச்சிக்கூடம் ஆகியவற்றை அமைத்து குளிர்சாதன வசதியுடன் நவீன மயமாக மாற்றுவது பற்றி தொழில் நுட்ப வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்படும். பொதுமக்களிடம் கருத்து கேட்டு காந்தி மார்க்கெட் இன்னும் 100 ஆண்டுகள் பயன்படும் வகையில் நவீனப்படுத்தப்படும். இந்த திட்டத்தை நான் செய்து முடிப்பேன் என உறுதி அளிக்கிறேன். அதனால் வியாபாரிகள் எக்காரணத்தைக் கெண்டும் காந்தி மார்க்கெட் மாற்றப்பட்டு விடுமோ என அச்சப் பட வேண்டாம். எனக்கு உதயசூரியன் சின்னத்தில்
வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் வியாபாரிகள் ஆகிய உங்களுக்கு உதவியாக இருப்பேன் என்று வாக்குறுதி அளித்தார்.
Related Tags :
Next Story