புதுக்குளம் கண்மாய் தூர்வாரப்பட வேண்டும்


புதுக்குளம் கண்மாய் தூர்வாரப்பட வேண்டும்
x
தினத்தந்தி 28 March 2021 8:21 PM IST (Updated: 28 March 2021 8:21 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் கண்டமனூரில் உள்ள புதுக்குளம் கண்மாய் தூர்வாரப்பட வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

தேனி:

புதுக்குளம் கண்மாய்
தேனி மாவட்டத்தில் கண்டமனூர் கிராமத்தில் 28 ஏக்கர் நிலப்பரப்பளவில் புதுக்குளம் கண்மாய் அமைந்துள்ளது. 

இந்த கண்மாயை சுற்றிலும் ஏராளமான ஏக்கர் நிலப்பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. 

கண்டமனூர் பெரியஓடையில் இருந்து கண்மாய்க்கு வரத்து வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கண்மாயில் எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

ஆக்கிரமிப்பு 
இதனால் தனி நபர்கள் சிலர் கண்மாயில் பெரும்பாலான பகுதியை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். 

மற்ற பகுதிகள் அனைத்திலும் மரம், செடிகள் அதிக அளவில் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. 

இதனால் மழை பெய்து ஓடையில் நீர் வரத்து ஏற்பட்டாலும் அதனை கண்மாயில் தேக்கி வைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனால் கண்மாய் நீாில்லாமல் வறண்டு காணப்படுகிறது.
விவசாயிகள் கோரிக்கை  
கண்மாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றி முழுமையாக நீர் தேக்கி வைத்தால் கண்டமனூர் பகுதி முழுவதும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விவசாயம் செழிப்படையும். 

மேலும் குடிநீர் தட்டுப்பாடு அபாயமும் நீங்கும். 

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து புதுக்குளம் கண்மாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story