லால்குடி தொகுதியை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல பாடுபடுவேன் த.மா.கா. வேட்பாளர் தர்மராஜ் பிரசாரம்


லால்குடி தொகுதியை வளர்ச்சி பாதையில்  கொண்டு செல்ல பாடுபடுவேன் த.மா.கா. வேட்பாளர் தர்மராஜ் பிரசாரம்
x
தினத்தந்தி 28 March 2021 9:46 PM IST (Updated: 28 March 2021 9:46 PM IST)
t-max-icont-min-icon

புள்ளம்பாடி ஒன்றியத்தில் இ.வெள்ளனூர், சரடமங்கலம் ஆகிய கிராமங்களில் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கல்லக்குடி,

திருச்சி மாவட்டம், லால்குடி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணி த.மா.கா. வேட்பாளர் தர்மராஜ் டி.கல்விகுடி, ஆலங்குடி, மாங்குடி, நத்தம், செம்பரை, திண்ணியம், கோமாகுடி, மேட்டுப்பட்டி, சிறுமயங்குடி மற்றும் புள்ளம்பாடி ஒன்றியத்தில் இ.வெள்ளனூர், சரடமங்கலம் ஆகிய கிராமங்களில் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

அப்போது அவர் பேசுகையில், லால்குடி தொகுதி கடந்த 15 ஆண்டுகளாக எந்தவித வளர்ச்சியும் இல்லாமல் மிகவும் பின்தங்கியுள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் தேவையான சமுதாயக் கூடங்கள், ரெயில்வே பாதைக்கு மேலே மேம்பாலங்கள், அரசின் கொள்முதல் நிலையங்கள், வறுமையில் உள்ள முதியோர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்து தொகுதியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல பாடுபடுவேன் என்றும், மாற்றத்திற்கான தேடலை நிவர்த்தி செய்ய நீங்கள் இரட்டை இலைக்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கூறினார். பிரசாரத்தின் போது ஒன்றிய செயலாளர்கள் சூப்பர் நடேசன், புள்ளம்பாடி சிவகுமார், ராஜாராம் நகர செயலாளர்கள் பிச்சைபிள்ளை, ஜேக்கப் அருள்ராஜ், பொன்னிசேகர், ஜெயசீலன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை அருண்நேரு, மாவட்ட மகளிரணி செயலாளர் செல்வமேரி, தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் ராஜமாணிக்கம், புள்ளம்பாடி சகாதேவன், திருநாவுக்கரசு மற்றும் பாரதீய ஜனதா உள்ளிட்ட கூட்டணி கட்சி ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். வாக்கு சேகரிப்பின் போது வேட்பாளருக்கு, கிராமங்கள் தோறும், திருவிழா போல் வாக்காளர்கள் வரவேற்று ஆரத்தி எடுத்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினார்கள்.

Next Story