ஆ.ராசாவை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


ஆ.ராசாவை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 March 2021 10:10 PM IST (Updated: 28 March 2021 10:10 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆ.ராசாவை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திண்டுக்கல்:
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து அ.தி.மு.க. மகளிரணி சார்பில் திண்டுக்கல் வெள்ளை விநாயகர் கோவில் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட மகளிரணி செயலாளர் (கிழக்கு) ஜெயலட்சுமி தலைமை தாங்கினார். தலைமை கழக பேச்சாளர் சிங்கை அம்புஜம் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பெண்கள் குறித்து அவதூறாக பேசிய தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, திண்டுக்கல் லியோனி ஆகியோரை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இதில் அபிராமி கூட்டுறவு சங்க தலைவர் பாரதிமுருகன், மகளிர் அணி நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிலக்கோட்டை
 இதேபோல் நிலக்கோட்டை மினி பஸ் நிலையம் முன்பு அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு அ.தி.மு.க. மாவட்ட இணை செயலாளர் ஹேமா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசா, திண்டுக்கல் லியோனி ஆகியோரை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் யாகப்பன், வத்தலக்குண்டு கிழக்கு ஒன்றிய செயலாளர் மோகன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
நெய்க்காரப்பட்டி
நெய்க்காரப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு முன்னாள் எம்.எல்.ஏ. குப்புசாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பெண்களை அவதூறாக பேசிய ஆ.ராசாவை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் அ.தி.மு.க., கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கன்னிவாடி
கன்னிவாடி பஸ் நிலையம் அருகே அ.தி.மு.க. சார்பில் அ.ராசா எம்.பி., லியோனி ஆகியோரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட ரெட்டியார்சத்திரம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஆர்.கே. சுப்பிரமணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ரெட்டியார்சத்திரம் மேற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன், ஒன்றிய செயலாளர்கள் மணலூர் சின்னசாமி, மயில்சாமி, மாணவரணி நிர்வாகி கோபி, கன்னிவாடி பேரூர் செயலாளர் முருகன், துணைச்செயலாளர் பி.முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story