கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் உற்சாகம்


கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் உற்சாகம்
x
தினத்தந்தி 28 March 2021 10:25 PM IST (Updated: 28 March 2021 10:25 PM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் உற்சாகம்

கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் குளு, குளு சீசன் நிலவுவதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. அதேநேரத்தில் கொடைக்கானலில் நடந்த வாரச்சந்தை, கிறிஸ்தவர்களின் குருத்தோலை பவனி, குறிஞ்சி ஆண்டவருக்கு காவடி எடுக்கும் விழா, அரசியல் கட்சியினரின் தேர்தல் பிரசாரம் என கொடைக்கானல் நகரமே மக்கள் வெள்ளத்தில் திணறியது. இதனால் பல்வேறு இடங்களில் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுற்றுலா இடங்களை பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். 
இதனிடையே சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக பிற்பகல் 3 மணி முதல் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக நகரின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழையும், சில இடங்களில் பலத்த மழையும் பெய்தது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர். பலர் மழையில் நனைந்தபடியே சுற்றுலா இடங்களை கண்டு களித்தனர். கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகுசவாரி செய்து ஆனந்தம் அடைந்தனர். இதனிடையே கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு போக்குவரத்து நெரிசலை சீரமைத்ததால், கொடைக்கானலில் இயல்பு நிலை திரும்பியது. 

Next Story