முதல்-அமைச்சரின் தாய் குறித்து அவதூறு பேச்சு தி.மு.க. முன்னாள் மத்திய மந்திரியை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்-மறியல்


முதல்-அமைச்சரின் தாய் குறித்து அவதூறு பேச்சு தி.மு.க. முன்னாள் மத்திய மந்திரியை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்-மறியல்
x
தினத்தந்தி 28 March 2021 11:02 PM IST (Updated: 28 March 2021 11:02 PM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சரின் தாய் குறித்து அவதூறாக பேசிய முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசாவை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாய் குறித்து அவதூறாக பேசிய முன்னாள் மத்திய மந்திரி ஆ,ராசாவை கண்டித்து திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில்  திருக்கோவிலூர் நான்குமுனை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு திருக்கோவிலூர் நகர அ.தி.மு.க. செயலாளர் கே.சுப்பு என்கிற சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் திருக்கோவிலூர் ஏ.பி.பழனி, என்.சேகர், முகையூர் எஸ்.பழனிச்சாமி, மாரங்கியூர் இளங்கோவன், கண்டாச்சிபுரம் தனபால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அ.தி.மு.க.வினர் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசாவை கண்டித்து கோஷம் எழுப்பினர். பின்னர் அவரது உருவபொம்மையை தீ வைத்து கொளுத்தினர். இதை போலீசார் தடுக்க முயன்ற போது அ.தி.மு.க.வினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அ.தி.மு.க.வினர் திருக்கோவிலூர்-கடலூர் சாலை நான்குமுனை சந்திப்பில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அவ்வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினரிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 

மறியல் போராட்டத்தில் அரகண்டநல்லூர் நகர செயலாளர் ராஜ்குமார், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் துரைராஜ், பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் சம்பத், ஜெயபாலன், ராஜி, ரகோத்தமன், ராயல் பாலாஜி, மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் எடையூர் பழனிசாமி, துணை செயலாளர் நாதன் காடுவெட்டியார் சுபாஷ் என்கிற ஜெயச்சந்திரன், மாவட்ட முன்னாள் கவுன்சிலர் ஏசுபாதம், நகர பொருளாளர் ஆதம்ஷபி, துணை செயலாளர் ராணி, பேரவை முன்னாள் நகர செயலாளர் ரவி, கூட்டுறவு சங்க தலைவர் சீனிவாசன், மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் கலா, திருக்கோவிலூர் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வக்கீல் செல்வகுமார், மாணவர் அணி துணைச் செயலாளர்கள் சக்திவேல், நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் பிரவீன் சந்தப்பேட்டை ஜின்னா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி

அதேபோல் அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசாவை கண்டித்து கள்ளக்குறிச்சி 4 முனை சந்திப்பில் பிரபு எம்.எல்.ஏ., மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஞானவேல், நகர செயலாளர் பாபு, ஒன்றிய செயலாளர்கள் தேவேந்திரன், ராஜேந்திரன், அய்யப்பா ஆகியோர் முன்னிலையில் அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அ.தி.மு.க,.வினர் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. அழகுவேல்பாபு, ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, அய்யம்பெருமாள், மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் சீனிவாசன், மாவட்ட அவைத்தலைவர் பச்சையாப்பிள்ளை, கூட்டுறவு வங்கி தலைவர் ரங்கன், கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு பண்டகசாலை தலைவர் வெற்றிவேல், முன்னாள் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான்பாஷா, பா.ஜ.க.மாவட்ட தலைவர் பாலசுந்தரம் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்பட 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

சங்கராபுரம்
சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் சங்கராபுரம் மும்முனை சந்திப்பில்  தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கூட்டுறவு சர்க்கரை ஆலை இணைய தலைவர் ராஜசேகர் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் அரசு, கிருஷ்ணமூர்த்தி, அய்யம்பெருமாள், நகர செயலாளர்கள் நாராயணன், குணசேகரன், கருப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சங்கராபுரம் தொகுதிக்குட்பட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

ரிஷிவந்தியம்

ரிஷிவந்தியம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ராசாவை கைது செய்யக்கோரி பகண்டை கூட்டுரோட்டில் ஒன்றிய செயலாளர்கள் கதிர். தண்டபாணி, அருணகிரி, துரைராஜ் ஆகியோர் தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் ஆ.ராசாவின் உருவபொம்மை எரித்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கட்சி நிர்வாகிகள் சந்திரசேகரன், வைத்தியநாதன், பாலமுருகன், சண்முகம், சின்ராஜ் மற்றும் பா.ம.க. ஒன்றிய செயலாளர்கள் அமுல்ராஜ், பழனி, ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story