புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது


2 பேர் கைது
x
2 பேர் கைது
தினத்தந்தி 28 March 2021 11:10 PM IST (Updated: 28 March 2021 11:12 PM IST)
t-max-icont-min-icon

புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது.

கோவை,

கோவையை அடுத்த துடியலூர் கண்ணப்ப நகர், தடாகம் கணுவாய் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

 அதன்பேரில் போலீசார் அந்த பகுதிகளில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக வினோத் முத்துக்குமார் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

 அவர்களிடமிருந்து 20 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story