அதிகம் பணம் புழங்கும் 4 தொகுதிகள்


பணம்
x
பணம்
தினத்தந்தி 28 March 2021 11:15 PM IST (Updated: 28 March 2021 11:16 PM IST)
t-max-icont-min-icon

அதிகம் பணம் புழங்கும் 4 தொகுதிகள்.

கோவை,

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 6-ந் தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் தீவிரமாக செய்து வருகிறது. 

இதில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, அதிக அளவு வாக்குகள் பதிவாகும் வாக்குச்சாவடிகள், பதற்றமான வாக்குச்சாவடிகள் மற்றும் செலவின பதற்றமான தொகுதிகள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளன. 


இதில், பதற்றமான தொகுதிகளில் மத்திய போலீசார் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட உள்ளனர். மேலும் அங்குள்ள வாக்குச்சாவடிகளில் வெப் காமிராக்கள் பொருத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதே போல தமிழகத்தில் செலவின பதற்றமான வாக்குச்சாவடிகள் என 105 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் கோவை மாவட்டத்தில் கோவை தெற்கு, தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் ஆகிய 4 தொகுதிகள் செலவின பதற்றமான தொகுதிகள் என்று கண்டறியப்பட்டு உள்ளது.


இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
செலவின பதற்றமான வாக்குச்சாவடிகள் என்பது முக்கிய பிரமுகர்கள் போட்டியிடும் தொகுதி, கடும் போட்டி நிலவும் தொகுதி, அதிகம் பணம் புழங்கும் தொகுதி என்று வகைப்படுத்தப்பட்டு உள்ளன. 

இதில் கோவை மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள செலவின பதற்றமான 4 தொகுதிகளும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் கடும் போட்டி உள்ள தொகுதிகள் ஆகும். 
இதன் காரணமாக அந்த 4 தொகுதிகளும் அதிக பணம் புழங்கும் தொகுதிகளாக கருதப்படுகிறது. எனவே இந்த தொகுதிகளில் தீவிர கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. 

அந்த தொகுதிகளில் தேர்தல் நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? பணப்பட்டுவாடா நடக்கிறதா? என்று தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story