ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.52 ஆயிரம் பறிமுதல்
ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.52 ஆயிரத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோத்தகிரி,
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதனால் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள குஞ்சப்பனை சோதனைச்சாவடியில் நேற்று காலை பறக்கும் படை அலுவலர் முபாரக் தலைமையிலான அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, உரிய ஆவணங்கள் இன்றி கோத்தகிரி அருகே உள்ள மசக்கல் கிராமத்தை சேர்ந்த சிவகுமார் என்பவர் 52 ஆயிரம் ரூபாயை கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து குன்னூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story