நீரில் மூழ்கி டிரைவர் உள்பட 2 பேர் சாவு
இளையான்குடி, காளையார்கோவிலில் கோவில் திருவிழாவுக்கு வந்த இடத்தில் நீரில் மூழ்கி டிரைவர் உள்பட 2 பேர் இறந்தனர்.
இளையான்குடி,
இளையான்குடி, காளையார்கோவிலில் கோவில் திருவிழாவுக்கு வந்த இடத்தில் நீரில் மூழ்கி டிரைவர் உள்பட 2 பேர் இறந்தனர்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை சேர்ந்தவர் ராஜா(வயது 35). கதிர் அறுக்கும் வாகன டிரைவர்..இவரது மனைவி கண்மணி. இவர்கள் இருவரும் கோவில் திருவிழாவை முன்னிட்டு இடையவலசை கிராமத்திற்கு விருந்துக்கு வந்துள்ளனர். அப்போது ராஜா தனது மைத்துனர்கள், உறவினர்களுடன் மடத்தூரணி கண்மாயில் குளிக்க சென்றுள்ளனர். அங்கு நீண்ட நேரமாக நேரில் மூழ்கி குளித்தார். அப்போது திடீரென ராஜா நீரில் மூழ்கினார். பின்னர் உறவினர்கள் அவரை மீட்டு இளையான்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே ராஜா இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து ராஜாவின் தந்தை செல்லச்சாமி இளையான்குடி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுவன் சாவு
காளையார்கோவில் அருகே உருவாட்டி பெரியநாயகி அம்மன் கோவில் திருவிழாவிற்கு தேவகோட்டை தாலுகாவைச் சேர்ந்த தலுதனூர் கிராமத்தைச் சேர்ந்த கண்ணனும், அவரது மகன் சபரி சித்துவும்(11) வந்தனர். அங்கே நண்பர்களுடன் சேர்ந்து கோவில் குளத்தில் குளிக்கச் சென்ற சபரி சித்துவை சிறிது நேரத்தில் காணவில்லை. நீரில் மூழ்கி சபரிமுத்து இறந்து விட்டான். சிறுவனுடன் குளிக்கச் சென்ற நண்பர்கள் தகவல் தெரிவித்ததும் கோவில் பாதுகாப்பு பணிக்கு வந்த தீயணைப்புத் துறையினர் குளத்தில் இறங்கி சபரி சித்துவின் உடலை மீட்டனர்.இது குறித்து காளையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 ேபரும் கோவில் திருவிழாவுக்கு வந்த இடத்தில் பலியானதால் அந்த பகுதி கிராம மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.
Related Tags :
Next Story