980 பேரிடம் தபால் ஓட்டுகள் சேகரிக்கும் பணி தொடங்கியது


980 பேரிடம் தபால் ஓட்டுகள் சேகரிக்கும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 29 March 2021 12:55 AM IST (Updated: 29 March 2021 12:55 AM IST)
t-max-icont-min-icon

குளித்தலை சட்டமன்ற தொகுதியில் 980 பேரிடம் தபால் ஓட்டுகள் சேகரிக்கும் பணி தொடங்கியது.

குளித்தலை
தபால் ஓட்டுகள்
தமிழகத்தில் வருகிற 6-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில் கொரோனா நோய் பரவல் காரணமாக 80 வயதை கடந்த முதியவர்களும் மற்றும் மாற்றுத்திறனாளிகளும் தபால் ஓட்டு மூலம் தங்களது வாக்குகளை செலுத்த தேர்தல் ஆணையம் மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
இதையொட்டி கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள முதியவர்களிடம் மாற்றுத்திறனாளிகளிடமும் தபால் வாக்கு சேகரிக்கும் பணி நேற்று முதல் தொடங்கியது. இந்த பணிகளை குளித்தலை உதவி கலெக்டர் ஷேக்அப்துல்ரகுமான் பார்வையிட்டார். 
980 பேர் விருப்பம்
குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தபால் ஓட்டு போட 980 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் தபால் ஓட்டு சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஒரு குழுவிற்கு 5 பேர் வீதம் மொத்தம் 25 குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
இவர்கள் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று அவர்களிடம் தபால் ஓட்டுக்காண ஆவணங்களில் கையெழுத்து அல்லது ரேகை பெற்றனர். பின்னர் அவர்களை மறைமுகமாக வாக்களிக்கச் செய்து அந்த வாக்குச்சீட்டுகளை பெற்றனர். அந்த வாக்கு சீட்டுகள் உள்ளிட்ட ஆவணங்களை முறையாக‌ பாதுகாப்பாக ஒட்டப்பட்டு குளித்தலை உதவி கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்ட அறையில் அதற்கென உள்ள பெட்டியில் போட்டு வைத்து பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்த பணி இன்றும் (திங்கட்கிழமை) நடக்கிறது. 

Next Story