கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் பங்குனி தேரோட்டம்


கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் பங்குனி தேரோட்டம்
x
தினத்தந்தி 29 March 2021 12:58 AM IST (Updated: 29 March 2021 12:58 AM IST)
t-max-icont-min-icon

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் பங்குனி தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

கரூர்
கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்
கரூரில் பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டும் பங்குனி திருவிழா கடந்த 20-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் காலை 7 மணிக்கு மற்றும் மாலை 6.30 சுவாமி வீதி உலா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 26-ந்தேதி திருகல்யாண உற்சவம் நடைபெற்றது.
தேரோட்டம்
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி முதலில் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமியை எழுந்தருள செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். 
தேர் முக்கிய வீதிகள் வழியாக ஆடி அசைந்தபடி வந்தது. அப்போது ஒவ்வொரு வீதியிலும் கூடிநின்ற பக்தர்கள் சுவாமிக்கு தேங்காய், பழம் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர் தேர் நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் மாலை 6 மணிக்கு வண்டிக்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.
இன்று தீர்த்தவாரி
இதைத்தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) காலை நடராஜ மூர்த்திக்கு தீர்த்தவாரி நடக்கிறது. நாளை (செவ்வாயக்கிழமை) விடையாற்றி உற்சவமும், நாளைமறுநாள் (புதன்கிழமை) ஊஞ்சல் உற்சவமும் நடைபெற உள்ளது. விழா நாட்களில் ஆன்மிக சொற்பொழிவுகளும், இசை நிகழ்ச்சிகளும் நால்வர் அரங்கில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Next Story