கரூர் மாவட்ட அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


கரூர் மாவட்ட அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 March 2021 1:06 AM IST (Updated: 29 March 2021 1:06 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்ட அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

கரூர்
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி  குறித்து தி.மு.க. துணை பொதுசெயலாளர் ஆ.ராசா எம்.பி. அவதூறாக பேசினார். இதனை கண்டித்து நேற்று கரூர் பஸ் நிலையம் அருகே உள்ள கோவை ரோட்டில் அ.தி.மு.க. மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தெற்கு நகர மகளிர் அணி செயலாளர் சுசிலா தலைமை தாங்கினார். மத்திய நகர மகளிர் அணி செயலாளர் மகேஷ்வரி, வடக்கு நகர செயலாளர் நிர்மலா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் அரவக்குறிச்சியில் அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் கலையரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல் குளித்தலை காந்திசிலை அருகேயும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story