9,006 தேர்தல் பணியாளர்களுக்கு தபால் வாக்களிக்க அனுமதி


9,006 தேர்தல் பணியாளர்களுக்கு தபால் வாக்களிக்க அனுமதி
x
தினத்தந்தி 29 March 2021 1:20 AM IST (Updated: 29 March 2021 1:20 AM IST)
t-max-icont-min-icon

7 சட்டமன்ற தொகுதிகளில் 9,006 தேர்தல் பணியாளர்களுக்கு தபால் வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் 6,888 பேருக்கு தபால் வாக்கு சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகர், 
7 சட்டமன்ற தொகுதிகளில் 9,006 தேர்தல் பணியாளர்களுக்கு தபால் வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் 6,888 பேருக்கு தபால் வாக்கு சீட்டு வழங்கப்பட்டுள்ளது. 
தபால் வாக்கு
தேர்தல்ஆணையம் தேர்தல் பணியாற்றும் அலுவலர்களுக்கு தபால் வாக்குப்பதிவு செய்ய அனுமதி அளித்துள்ளது.
அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் 11,376 பேர் தேர்தல் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். இவர்களில் 9,006 பேருக்கு மட்டுமே இம்மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்களிக்க தகுதி உள்ளவர்கள்.
அதுதவிர 2,370 பேர் பிற மாவட்டங்களில் வாக்களிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். இதில் ராஜபாளையம் தொகுதியில் 1,200 பேரும், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் 1,526 பேரும், சாத்தூர் தொகுதியில் 1,310 பேரும், சிவகாசி தொகுதியில் 1,113 பேரும், விருதுநகர் தொகுதியில் 1,170 பேரும், அருப்புக்கோட்டை தொகுதியில் 1,236 பேரும், திருச்சுழி தொகுதியில் 1,451 பேரும் ஆக 7 தொகுதிகளிலும் 9,006 பணியாளர்கள் தபால் வாக்குப்பதிவு செய்ய வாய்ப்பு பெற்றவர்கள்.
 வாக்குச்சீட்டு 
இதனை தொடர்ந்து மாவட்ட தேர்தல் அதிகாரி பணியாளர்களுக்கு தபால் வாக்குப்பதிவு சீட்டு வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.
 பயிற்சி வகுப்புக்கு வந்த தேர்தல் பணியாளர்களுக்கு தபால் வாக்குச்சீட்டு வழங்கப்பட்டு உள்ளது. 6,888 பேருக்கு இது வரை தபால் வாக்கு சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ராஜபாளையத்தில் 1,170 பேருக்கும், ஸ்ரீவில்லிபுத்தூரில் 1,067 பேருக்கும்,  சாத்தூர் தொகுதியில் 1,004 பேருக்கும், சிவகாசி தொகுதியில் 728 பேருக்கும், விருதுநகர் தொகுதியில் 1,0 28 பேருக்கும், அருப்புக்கோட்டை தொகுதியில் 1,396 பேருக்கும், திருச்சுழி தொகுதியில் 495 பேருக்கும் தபால் வாக்குச்சீட்டுவழங்கப்பட்டுள்ளது.
 ஆக மொத்தம் 7 தொகுதிகளிலும் சேர்த்து 6088 பேருக்கு தபால் வாக்கு சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கும், தபால் வாக்குச்சீட்டு  வழங்கப்பட்டு பதிவு செய்யப்பட்ட வாக்குச்சீட்டுகளை சேகரிக்கும் பணி தொடங்கியுள்ளது. 

Next Story