போக்சோ சட்டத்தில் கைதானவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை


போக்சோ சட்டத்தில் கைதானவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை
x
தினத்தந்தி 29 March 2021 1:28 AM IST (Updated: 29 March 2021 1:28 AM IST)
t-max-icont-min-icon

போக்சோ சட்டத்தில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி சரகம் காட்டுவயல் பகுதியில் ஆடு மேய்த்துகொண்டிருந்த 8 வயது சிறுமியை கடந்த 6-ந் தேதி அரசர்குளம் மாணிக்கம் குடியிருப்பு பகுதியை சேர்ந்த அஜித் (வயது 20) பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அவரை பொதுமக்கள் பிடித்து அறந்தாங்கி மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். அவர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இவர் மீது ஏற்கனவே 2020-ம் ஆண்டில் போக்சோ வழக்கு அறந்தாங்கி மகளிர் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் இருந்து வருகிறது. இந்தநிலையில் தொடர் பாலியல் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட அஜித்தை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரிக்கு, போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். கலெக்டரின் உத்தரவின்பேரில் அஜித் மீது குண்டர் சட்டத்தில் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.


Next Story