கடலூர் மாவட்டத்தில் மேலும் 40 பேருக்கு கொரோனா
மேலும் 40 பேருக்கு கொரோனா
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 25 ஆயிரத்து 521 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அதில் நேற்று முன்தினம் மட்டும் 43 பேர் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், மேலும் 40 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இவர்களில் சென்னையில் இருந்து என்.எல்.சி., மங்களூர், நல்லூர், கடலூர் வந்த 4 பேர், சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த்தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 14 பேருக்கும், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 22 பேருக்கும் பாதிப்பு உறுதியானது. இதனால் மாவட்டத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நேற்று முன்தினம் வரை 25 ஆயிரத்து 48 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்ற நிலையில், நேற்று 15 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கொரோனா பாதித்த 170 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 39 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 112 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.
Related Tags :
Next Story