தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை


தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
x
தினத்தந்தி 29 March 2021 1:51 AM IST (Updated: 29 March 2021 1:51 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு குருத்தோலை பவனியும் சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது.

விருதுநகர், 
மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு குருத்தோலை பவனியும் சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது.
 விருதுநகர்
 விருதுநகர்மறை வட்ட அதிபரும், தூய இன்னாசியர் ஆலய பங்குத்தந்தை பெனடிக்ட் அம்புரோஸ்ராஜ் அடிகளார், துணைப்பங்குத்தந்தை சந்தியாகப்பர் அடிகளார் ஆகியோர் தலைமையில் புனிதப்படுத்தப்பட்ட குருத்தோலைகளை கையில் ஏந்தியவாறு திரளான கிறிஸ்தவர்கள் ஊர்வலமாக சென்றனர்.
ஊர்வலத்தில் சென்றவர்கள் ஓசன்னா என முழங்கியபடியும், ஜெபங்கள் செய்தபடியும் கிறிஸ்து வருகை பாடல்களைப் பாடிய படியும் சென்றனர். 
குருத்தோலை பவனி ஊர்வலம் 
குருத்தோலை பவனி ஊர்வலம் தேவாலயத்தில் இருந்து புறப்பட்டு நகராட்சி அலுவலகம், ெரயில்வே மேம்பாலம், அருப்புக்கோட்டை சாலை வழியாக ஆலயத்தை வந்தடைந்தது.
அதைத்தொடர்ந்து சிறப்பு திருப்பலியும், மறையுரையும் நடைபெற்றது. பாண்டியன் நகர் தூய சவேரியார் ஆலயத்தில் பங்குத்தந்தை ஸ்டீபன் சேவியர் அடிகளார், எஸ்.எப்.எஸ். பள்ளி முதல்வர் இன்னாசிமுத்து அடிகளார் ஆகியோர் தலைமையில் குருத்தோலை பவனி நடைபெற்றது.
சிறப்பு திருப்பலி 
 இந்த பவனி அண்ணா நகர், தூய அந்தோணியார் ஆலயத்திலிருந்து புறப்பட்டு ரோசல்பட்டி ஊராட்சி அலுவலகம் வழியாக ஆலயம் வந்தடைந்தது.
 தொடர்ந்து சிறப்பு திருப்பலியும், மறையுரையும் நடைபெற்றது. நிறைவாழ்வு நகர் தூய ஜெபமாலை அன்னையின் ஆலயத்தில் பங்குத்தந்தை தாமஸ் வெனிஸ் அடிகளார் தலைமையில் குருத்தோலை பவனி நடைபெற்றது. இந்த பவனி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள பாலன்நகர் தூய செபஸ்தியார் சிற்றாலயத்தில் இருந்து பாத்திமா நகர் சிவகாசி பாலம் வழியாக ஆலயத்தை வந்தடைந்தது. இதனைத்தொடர்ந்து சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது.
ஆர்.ஆர்.நகர் 
விருதுநகர் அருகே உள்ள ஆர்.ஆர். நகரில் தூய வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை அலெக்ஸ்ஞானராஜ் அடிகளார் தொகையை பங்குத்தந்தை பென்சிகர் அடிகளார் தலைமையில் குருத்தோலை பவனி நடைபெற்றது. முக்குரோடு பஸ் நிறுத்தத்தில் இருந்து மெயின் ரோடு வழியாக ஆலயத்தை வந்தடைந்தது.
 சாத்தூர் அருகே உள்ள குழந்தை ஏசு ஆலயத்தில் பங்குத்தந்தைஜெயராஜ் அடிகளார் தலைமையில் குருத்தோலை பவனி நடைபெற்றது.  பொது நூலகத்திலிருந்து ஆலயத்தை வந்தடைந்தது. இதனை தொடர்ந்து சிறப்பு திருப்பலியும், மறையுரையும் நடைபெற்றது. குருத்தோலை பவனியில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் குருத்தோலை பவனியும், சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது. திருப்பலியை புதுப்பட்டி உதவி பங்குத்தந்தை அருட்பணி ஜோ மைக்கேல் யூஜின் நிறைவேற்றினார்.

Next Story