முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கரத்தை வலுப்படுத்த பா.ஜ.க. வேட்பாளரை வெற்றி பெற செய்யுங்கள்; மொடக்குறிச்சியில் நடிகை கவுதமி பிரசாரம்

முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கரத்தை வலுப்படுத்த பா.ஜ.க. வேட்பாளரை வெற்றி பெற செய்யுங்கள்; மொடக்குறிச்சியில் நடிகை கவுதமி பிரசாரம்
x
தினத்தந்தி 29 March 2021 2:13 AM IST (Updated: 29 March 2021 2:13 AM IST)
t-max-icont-min-icon

முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கரத்தை வலுப்படுத்த பா.ஜ.க. வேட்பாளரை வெற்றி பெற செய்யுங்கள் என மொடக்குறிச்சியில் நடிகை கவுதமி தேர்தல் பிரசாரத்தில் கூறினார்.

மொடக்குறிச்சி
முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கரத்தை வலுப்படுத்த பா.ஜ.க. வேட்பாளரை வெற்றி பெற செய்யுங்கள் என மொடக்குறிச்சியில் நடிகை கவுதமி தேர்தல் பிரசாரத்தில் கூறினார். 
நடிகை கவுதமி
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் தேர்தல் பிரசாரம் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.  இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் சரஸ்வதியை ஆதரித்து நடிகை கவுதமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். 
நல்லாட்சி தொடர...
மொடக்குறிச்சி தொகுதிக்கு உள்பட்ட அவல்பூந்துறை, கஸ்பாபேட்டை, எழுமாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்குகள் சேகரித்து நடிகை கவுதமி பேசும்போது கூறியதாவது:-
எண்ணற்ற நல்ல திட்டங்களை ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். வழியில் செயல்படுத்தி வரும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கரத்தையும், மத்தியில் நல்ல பல திட்டங்கள் தீட்டி நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் நரேந்திர மோடியின் கரத்தையும் வலுப்படுத்த, நல்லாட்சி தொடர மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் சரஸ்வதியை தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார். 

Next Story