பெண்ணிடம் 12 பவுன் தாலி சங்கிலி பறிப்பு


பெண்ணிடம் 12 பவுன் தாலி சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 29 March 2021 2:21 AM IST (Updated: 29 March 2021 2:21 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணிடம் 12 பவுன் தாலி சங்கிலி பறிக்கப்பட்டது

விராலிமலை
விராலிமலை பெரியார் நகரைச் சேர்ந்த கென்னடி மனைவி கலைமதி (வயது 42). இவர் நேற்று முன்தினம் இரவு சந்தைப்பேட்டையில் உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கலைமதி கழுத்தில் அணிந்திருந்த சுமார் 12 பவுன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து விராலிமலை போலீசில் கலைமதி கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story