போலீஸ் நிலையங்களில் ஆ.ராசா எம்.பி. மீது தலா 3 பிரிவுகளின் கீழ் வழக்கு


போலீஸ் நிலையங்களில் ஆ.ராசா எம்.பி. மீது தலா 3 பிரிவுகளின் கீழ் வழக்கு
x
தினத்தந்தி 29 March 2021 2:28 AM IST (Updated: 29 March 2021 2:28 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் பிரசாரத்தில் முதல்-அமைச்சரை தரக்குறைவாக பேசியதாக போலீஸ் நிலையங்களில் ஆ.ராசா எம்.பி. மீது தலா 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரியலூர்:
அரியலூர் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பாவை ஆதரித்து தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஆ.ராசா எம்.பி. கீழப்பழுவூரில் தேர்தல் பிரசாரம் செய்தார். இதேபோல் ஜெயங்கொண்டம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கண்ணனை ஆதரித்து மீன்சுருட்டியில் அவர் பிரசாரம் செய்தார். மேற்கண்ட 2 இடங்களிலும் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தரக்குறைவாக பேசியதாக, ஆ.ராசா எம்.பி. மீது கீழப்பழுவூர், மீன்சுருட்டி ஆகிய 2 போலீஸ் நிலையங்களில் தலா 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story