பட்டாசு வெடித்த ம.தி.மு.க. பிரமுகர் கைது
பட்டாசு வெடித்த ம.தி.மு.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
உடையார்பாளையம்:
கொரோனா தொற்று பரவலை தடுக்க தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் உடையார்பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் அரியலூர் தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பா பிரசாரம் செய்தார். அப்போது உடையார்பாளையத்தை அடுத்த நடுவலூர் கிராமத்தை சேர்ந்த ம.தி.மு.க. பிரமுகரான பூராசாமி(வயது 44), பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பட்டாசு வெடித்ததாக, கிராம நிர்வாக அலுவலர் அன்பழகன், உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து பூராசாமியை கைது செய்தனர்.
Related Tags :
Next Story