பறக்கும்படை சோதனையில் ரூ.4¾ லட்சம் பறிமுதல்


பறக்கும்படை சோதனையில் ரூ.4¾ லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 29 March 2021 2:31 AM IST (Updated: 29 March 2021 2:31 AM IST)
t-max-icont-min-icon

பறக்கும்படை சோதனையில் ரூ.4¾ லட்சம் பறிமுதல்

பூதப்பாண்டி:
கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி தேர்தல் பறக்கும்படை அதிகாரி ஜெயகுமார் தலைமையிலான அதிகாரிகள் நேற்று முன்தினம் மாலையில் ஆரல்வாய்மொழி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். லாரியில் ரூ.4 லட்சத்து 83 ஆயிரத்து 100 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் பூதப்பாண்டியில் உள்ள தோவாளை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Next Story