அ தி மு க கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்


அ தி மு க  கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 March 2021 2:49 AM IST (Updated: 29 March 2021 2:49 AM IST)
t-max-icont-min-icon

முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் குறித்து அவதூறாக பேசிய தி.மு.க. துணை பொதுச்செயாளர் ஆ.ராசாவை கைது செய்யக்கோரி திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்
முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் குறித்து அவதூறாக பேசிய தி.மு.க. துணை பொதுச்செயாளர்  ஆ.ராசாவை கைது செய்யக்கோரி திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கண்டன ஆர்ப்பாட்டம்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் குறித்து தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இது தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. வினர் மட்டுமின்றி அனைத்து தரப்பினர் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அவதூறாக பேசிய தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசாவை கைது செய்யக்கோரி திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை திருப்பூர் குமரன் சிலை முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மகளிரணி செயலாளர் சுந்தராம்பாள் தலைமை தாங்கினார். 
துணை செயலாளர் ஜான், நிர்வாகிகள் சடையப்பன், கண்ணப்பன், மார்க்கெட் சக்திவேல் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது ஆ.ராசாவுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.
அனுப்பர்பாளையம்
திருப்பூர் 15 வேலம்பாளையத்தில்  ஆ.ராசா எம்.பி.யை கண்டித்து திருப்பூர் வடக்கு தொகுதி அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின்போது ஆ.ராசாவுக்கு கண்டனம் தெரிவித்தும், அவர் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் அ.தி.மு.க. மாநகர் மாவட்ட துணை செயலாளர் ஜான், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட மாணவரணி செயலாளர் சதீஷ், பகுதி செயலாளர்கள் கருணாகரன், சுப்பு, 15 வேலம்பாளையம் கூட்டுறவு சங்க தலைவர் வி.கே.பி.மணி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி பொருளாளர் தண்ணீர்பந்தல் தனபால், முன்னாள் கவுன்சிலர் கோட்டா பாலு மற்றும் பா.ஜ.க., பா.ம.க., த.மா.கா. உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதுபோல் அவினாசி புதிய பஸ் நிலையம் எதிரே அ.தி.மு.க. சார்பில் கருப்பு கொடியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்தில், தமிழக சபாநாயகரின் மகன் டி.லோகேஷ்தமிழ்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் அ.ஜெகதீசன் மேற்கு, சேவூர் ஜி.வேலுசாமி வடக்கு, மு.சுப்பிரமணியம் தெற்கு, அவினாசி நகர செயலாளர் ப.ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story