தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருட்டு
தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருட்டு போனது
அலங்காநல்லூர்
பாலமேடு அருகே ராஜக்காள்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கலைச்செல்வம்(வயது 58). விவசாய கூலி வேலை பார்க்கிறார். இவர் தனது குடும்பத்தினருடன் ஊருக்கு அருகே உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஊருக்குள் நடந்த கோவில் திருவிழாவிற்கு குடும்பத்துடன் சென்று விட்டார். பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது கதவு திறந்த நிலையில் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதைதொடர்ந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. மேலும் பீரோவில் வைத்திருந்த ரூ.6 லட்சம் மதிப்புள்ள 12 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் உள்ளிட்டவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் பாலமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து வீடு புகுந்து திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story