பாத யாத்திரை சென்ற பக்தர் பலி


பாத யாத்திரை சென்ற பக்தர் பலி
x
தினத்தந்தி 28 March 2021 9:30 PM GMT (Updated: 28 March 2021 9:30 PM GMT)

பாத யாத்திரை சென்ற பக்தர் பலியானார்

வாடிப்பட்டி
திண்டுக்கல் மாவட்டம் அனுமந்தன்கோட்டை செவகாட்டினை சேர்ந்தவர் சவுரியர். இவரது மகன் சந்தியாகு(வயது 30). இவரது மனைவி ஜான்சி, உறவினர்கள் அனிதா, இன்பராஜ் ஆகியோர் வாடிப்பட்டியில் உள்ள மாதா கோவிலுக்கு நேற்றுமுன்தினம் இரவு பாதயாத்திரையாக புறப்பட்டனர். நேற்று அதிகாலை 1.30 மணிக்கு திண்டுக்கல்-மதுரை நான்குவழிச்சாலையில் வாடிப்பட்டி அருகே சாணாம்பட்டி பாலத்தின் மீது நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் பாதயாத்திரை கூட்டத்திற்குள் புகுந்தது. இதில் இன்பராஜ் மீது மோதியதில் அவர் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.  சந்தியாகு, அனிதா மற்றும் மோட்டார்சைக்கிள் ஓட்டிவந்த மதுரையை சேர்ந்த அகமதுஷா, அவருடன் வந்த சக்திவேல் ஆகியோர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுசம்பந்தமாக வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சில்வியா ஜாஸ்மின், சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story