ஆ.ராசாவை கண்டித்து அ.தி.மு.க. மகளிரணி ஆர்ப்பாட்டம் நடந்தது


ஆ.ராசாவை கண்டித்து அ.தி.மு.க. மகளிரணி ஆர்ப்பாட்டம் நடந்தது
x
தினத்தந்தி 29 March 2021 3:00 AM IST (Updated: 29 March 2021 3:00 AM IST)
t-max-icont-min-icon

ஆ.ராசாவை கண்டித்து அ.தி.மு.க. மகளிரணி ஆர்ப்பாட்டம்

திருப்பரங்குன்றம்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவரது தாயாரை இழிவாக  பேசிய தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்காத மு.க.ஸ்டாலினை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருப்பரங்குன்றம் கிழக்கு பகுதி அ.தி.மு.க. மகளிரணியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் திருப்பரங்குன்றம் பதினாறுகால் மண்டபம் அருகே திரண்டனர். மேலும் பெண்களை இழிவுபடுத்தி பேசுகின்ற ராசாவை கண்டிக்கின்றோம் என்ற வாசகங்கள் கொண்ட அட்டைகளை கையில் ஏந்தி இருந்தனர். அவர்கள் ராசாவை கைது செய், கைது செய் என்று கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். 
இதற்கிடையே திருப்பரங்குன்றம் பஸ் நிலையம் பகுதியில் அகில பாரத அனுமன் சேனா சார்பில் அதன் மாநில தலைமை நிலைய செயலாளர் ராமலிங்கம் தலைமையில் ராசாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதேபோல் மதுரை மாநகர் அ.தி.மு.க. மகளிரணி சார்பில் முன்னாள் மந்திய மந்திரி ஆ.ராசாவை கண்டித்து முனிச்சாலை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Next Story