சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 47 பேர் பாதிப்பு


சேலம் மாவட்டத்தில்  கொரோனாவுக்கு 47 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 29 March 2021 3:13 AM IST (Updated: 29 March 2021 3:13 AM IST)
t-max-icont-min-icon

47 affected to corona

சேலம்:
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 55 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 47 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் தெரியவந்தது. அவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 348 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 43 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மேலும் 284 பேருக்கு தொடர்ந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story