காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா- பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு


காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா- பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு
x
தினத்தந்தி 29 March 2021 3:18 AM IST (Updated: 29 March 2021 3:18 AM IST)
t-max-icont-min-icon

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடந்தது. விழாவையொட்டி பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர்.

விக்கிரமசிங்கபுரம், மார்ச்:
காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் வரும் பங்குனி உத்திர நாளன்று பொதுமக்கள் தங்களது குலதெய்வத்தை வழிபடுவது வழக்கம். குலதெய்வம் தெரியாதவர்கள் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் வந்து வழிபடுவது காலங்காலமாக நடைபெற்று வருகிறது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே கோவிலுக்கு பக்தர்கள் வரத் தொடங்கினர். இவர்கள் பேச்சியம்மன், பிரம்மராட்சி சன்னதி முன்பு பொங்கலிட்டு வழிபட்டனர். மேலும் கோவிலில் அதிகாலை முதலே மகாலிங்க சுவாமி, சொரிமுத்து அய்யனார், சங்கிலி பூதத்தார், பேச்சியம்மன், பிரம்மராட்சி, சுடலை மாடசுவாமி, தளவாய் மாடசுவாமி, தூசிமாடசாமி மற்றும் பட்டவராயன் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இந்த ஆண்டு பங்குனி உத்திரம் ஞாயிற்றுக்கிழமை வந்ததால் பாபநாசம் முதல் வனத்துறை சோதனைச் சாவடி வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பக்தர்கள் நீண்ட நேரம் தங்களது வாகனங்களில் காத்திருந்து கோவிலுக்கு சென்றனர்.

Next Story