சிவகிரி பகுதியில் வாகனங்களில் கொண்டு சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல்


சிவகிரி பகுதியில் வாகனங்களில் கொண்டு சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 29 March 2021 3:57 AM IST (Updated: 29 March 2021 3:57 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரி பகுதியில் வாகனங்களில் கொண்டு சென்ற ரூ.2 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

சிவகிரி, மார்ச்:
சிவகிரி பகுதியில் வாகனங்களில் கொண்டு சென்ற ரூ.2 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

வாகன சோதனை

வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள புளியங்குடியில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் மெயின் ரோட்டில் உள்ள ஈச்சபொட்டல்புதூர் விலக்கு பகுதியில் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் முருகன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திவான் காசிம் மற்றும் போலீசார் ரமேஷ்குமார் சுதந்திரராஜன், கதிரேசன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சங்கரன்கோவிலில் இருந்து கடையநல்லூருக்குச் சென்ற மோட்டார் சைக்கிளை நிறுத்தினர். விசாரணையில், சிவகிரி தாலுகா செந்தட்டியாபுரம் தெற்குத்தெருவைச்சேர்ந்த முருகன் (வயது 52) என்பதும், அவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1.18 லட்சம் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்து, சிவகிரி தாலுகா அலுவலகத்தில் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலரும், சிவகிரி துணை தாசில்தாருமான சண்முகத்தாயிடம் ஒப்படைத்தனர்.

பணம் பறிமுதல்

இதனைத் தொடர்ந்து சங்கரன்கோவில்- ராஜபாளையம் செல்லும் சாலையில் உள்ள கல்லூரி அருகே நிலையான கண்காணிப்புக்குழு அலுவலரும், பறக்கும்படை அலுவலருமான வெங்கடேஷ் தலைமையில் திருமலைக்குமார், விஜகுமார், வினோத்குமார் ஆகியோர் வாகன சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தினர். விசாரணையில், காரை ஓட்டி வந்தவர் விருதுநகர் மாவட்டம் மேல குன்னக்குடி சோழபுரத்தை முத்துச்சாமி மகன் திருமாவளவன் என்பதும், அவரிடம் ரூ.90 ஆயிரம் இருந்ததும் தெரியவந்தது. அவரிடம் ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து, சிவகிரி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Next Story