பெண் தற்கொலை: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்


பெண் தற்கொலை: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்
x
தினத்தந்தி 29 March 2021 4:05 AM IST (Updated: 29 March 2021 4:05 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்

சேலம்:
சேலம் அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சம்பூர்ணம் (வயது 44). இவரது மகன் அஜித்குமார் (23). செவ்வாய்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் 16 வயது உடைய சிறுமியை திருமணம் செய்து கொண்டு தலைமறைவானார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் செவ்வாய்பேட்டை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பூர்ணத்தை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் அஜித்குமார் இருக்கும் இடத்தை கூறவில்லை என்றால் கைது செய்வோம் என்று அவரை போலீசார் மிரட்டியதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த சம்பூர்ணம் சம்பவத்தன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து போலீசார் தாக்கி துன்புறுத்தியதால் தான் சம்பூர்ணம் தற்கொலை செய்து கொண்டார் என்றும், சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து செவ்வாய்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாவை ஆயுதப்படைக்கு மாற்றி, போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமார் உத்தரவிட்டார்.

Next Story