சேலத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
சேலத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
சேலம்:
தில் நேற்று குருத்தோலை ஞாயிறு பவனி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
குருத்தோலை ஞாயிறு
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு, கழுதை குட்டியின் மீது அமர்ந்து ஜெருசலேம் நகருக்கு சென்றார். அப்போது அங்கிருந்தவர்கள் குருத்தோலைகளை ஏந்தியபடி அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை நினைவுகூறும் வகையில் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெறும்.
கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு, ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறவில்லை.
பவனி
இந்தநிலையில் நேற்று குருத்தோலை ஞாயிறு அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சேலம் அரிசிபாளையம் குழந்தை இயேசு பேராலயத்தில் பங்கு தந்தை ஜோசப் லாசர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. முன்னதாக செயின்ட் மேரிஸ் பள்ளியில் இருந்து திரளான கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை ஏந்தியபடி பவனியாக பேராலயத்திற்கு வந்தனர்.
சேலம் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் தேவாலயத்தில் ஆயர் ஜவகர் வில்சன் ஆசிர் டேவிட் தலைமையிலும், கோட்டை சி.எஸ்.ஐ. லெக்லர் நினைவாலயத்தில் ஆயர் கெவின் தலைமையிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
திரளான கிறிஸ்தவர்கள்
இதேபோல், குருத்தோலை ஞாயிறையொட்டி அஸ்தம்பட்டி சி.எஸ்.ஐ. இம்மானுவேல் ஆலயம், ஜங்சன் சி.எஸ்.ஐ. திரித்துவ ஆலயம், சூரமங்கலம் இருதய ஆண்டவர் ஆலயம், ஜான்சன்பேட்டை அந்தோணியார் ஆலயம், சன்னிசாசிகுண்டு புனித சூசையப்பர் ஆலயம், அழகாபுரம் புனித மைக்கேல் ஆலயம் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story