திருப்பூர் மாவட்டத்தில் 61 பேருக்கு கொரோனா
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள், அனைவரும் தற்போது மேல் சிகிச்சைக்காக திருப்பூர், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 167 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 224 ஆக உள்ளது. நேற்று ஒரே நாளில் 42 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது, 313 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 18,629 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 30-க்கும் குறைவாக வந்து இருந்த நிலையில் கடந்த 2 நாட்களாக 60 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story