கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.24¾ லட்சம் பணம், பரிசுப்பொருட்கள் பறிமுதல்
கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.24¾ லட்சம் பணம், பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை,
கோவை மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதை தடுக்க தீவிர வாகன சோதனையில் பறக்கும் படையினர் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் ரூ.22 லட்சத்து 89 ஆயிரத்து 410 ரொக்கம் மற்றும் ரூ.1 லட்சத்து 86 ஆயிரத்து 120 மதிப்பிலான பரிசுப்பொருட்கள் என மொத்தம் ரூ.24 லட்சத்து 75 ஆயிரத்து 530 பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
கோவை மாவட்டத்தில் வாகன சோதனை தொடங்கப்பட்டதில் இருந்து தற்போது வரை ரூ.53 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் மதுப்பாட்டில்கள், இதரபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story