மேலூர் கொள்ளிடம் கரையில் 37 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சிலை அமைக்கும் பணி தீவிரம்
மேலூர் கொள்ளிடம் கரையில் 37 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சிலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருச்சி,
திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர் அருகே கொள்ளிடம் ஆற்றின் கரையில் 37 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சிலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சுமார் 100 டன் எடையுள்ள கல்லில் கலைநயத்துடன் வடிவமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சிலை வடிவமைக்கும் பணி நிறைவு பெற்றதும், இன்னும் ஓரிரு மாதங்களில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட இருப்பதாக அதனை நிர்வகித்து வரும் வாசுதேவன் என்பவர் தெரிவித்துள்ளார். இந்த சிலை நிறுவப்பட்டால் தமிழகத்திலேயே அதிக உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலை என்ற பெருமை கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
Related Tags :
Next Story