வீடு வீடாக பூத் சிலிப் வழங்கப்படுகிறது


வீடு வீடாக பூத் சிலிப் வழங்கப்படுகிறது
x
தினத்தந்தி 29 March 2021 5:05 AM IST (Updated: 29 March 2021 5:05 AM IST)
t-max-icont-min-icon

வாக்காளர்களுக்கு வீடு வீடாக பூத் சிலிப் வழங்கப்படுகிறது

திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் 3 ஆயிரத்து 343 வாக்குச்சாவடிகள் உள்ளன. 23 லட்சத்து 59 ஆயிரத்து 804 வாக்காளர்கள் இருக்கிறார்கள். வாக்காளர்கள் வாக்களிக்க செல்லும்போது வாக்காளர் பெயர், வரிசை எண், பாகம் எண், அடையாள அட்டை எண், வாக்குச்சாவடி எண், கட்டிடம் ஆகிய விவரங்கள் அடங்கிய பூத் சிலிப் வழங்கப்படும். அந்த பூத் சிலிப் அச்சிடப்பட்டு திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. பூத் சிலிப்பில் வாக்காளர்களின் போட்டோ இடம்பெறவில்லை. இதை பயன்படுத்தி வாக்காளர்கள் ஓட்டுப்போட முடியாது. வாக்காளர் அடையாள அட்டை அல்லது 11 வகையான ஆவணங்களை பயன்படுத்தியே வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
8 சட்டமன்ற தொகுதிகளுக்கான பூத் சிலிப்கள் அச்சிடப்பட்டு கலெக்டர் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு பூத் சிலிப் அனுப்பி வைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ஒப்புதலுடன் வீடு, வீடாக பூத் சிலிப்கள் வினியோகம் செய்யப்பட உள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story