தமிழ்நாட்டில் முன்மாதிரி தொகுதியாக கிள்ளியூரை மாற்ற வாக்களியுங்கள்; காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார் பிரசாரம்


காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார் வீதி வீதியாக வாக்கு சேகரித்த போது
x
காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார் வீதி வீதியாக வாக்கு சேகரித்த போது
தினத்தந்தி 29 March 2021 5:30 AM IST (Updated: 29 March 2021 5:31 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் முன் மாதிரி தொகுதியாக கிள்ளியூரை மாற்ற எனக்கு வாக்களியுங்கள் என்று காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார் பிரசாரம் செய்தார்.

ராஜேஷ்குமார்
கிள்ளியூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ராஜேஷ் குமார் வீதி வீதியாக சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.அவர் நேற்று சூரியகோடு பகுதியில் பிரசாரத்தை தொடங்கி, மலவிளை, பொன்னப்பநகர், சீனிவிளை, திட்டங்கனாவிளை, தையாலுமூடு, மரியகிரி, ஏலூர்காடு, காமராஜ் நகர், அதங்கோடு, சாரப்பளஞ்சி, வாறுதட்டு, குழிவிளை, செம்மான்விளை, மணக்காலை, மங்காடு, வாவறை சாத்தன்கோடு, ஆதிச்விளாகம், ஆலங்கோடு, பணமுகம், கோயிக்கல்தோப்பு, சரல்முக்கு, பள்ளிக்கல், விரிவிளை ஆகிய பகுதிகளில் மக்களை சந்தித்து வாக்கு 
சேகரித்தார். 

அப்போது ராஜேஷ் குமார் கூறியதாவது:- 

தரம் உயர்வு

நெய்யாறு இடதுகரை கால்வாயில் கோர்ட்டு உத்தரவுப்படி கேரள அரசிடம் பேசி தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து வீடுகளுக்கும் தினமும் குடிநீர் வழங்கவும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தவும், தொகுதியில் புதிய வழித்தடத்தில் பஸ்கள் விடவும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வாழை விவசாயிகளுக்கு குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அது மட்டுமல்லாமல் வேளாண் அலுவலக கிளையும் அமைய முயற்சிகள்மேற்கொள்வேன். இதுதவிர தொகுதியில் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் குமரி 
மாவட்டத்தில் பல்வேறு தொழிற்சாலைகளை அமைக்க நடவடிக்கை எடுப்பேன்.தொகுதியில் உள்ள இளைஞர்கள் சிறந்து விளங்க வசதியாக உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும்.

முன் மாதிரி தொகுதி
கிள்ளியூரில் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து, தமிழ்நாட்டில் முன்மாதிரி தொகுதியாக கிள்ளியூரை மாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தவும். வேலைவாய்ப்புகள் பெருகிடவும் எனக்கு வாக்களியுங்கள்.  மத சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கன்னியாகுமரி நாடாளுமன்ற வேட்பாளரான விஜய் வசந்துக்கும் கை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு ராஜேஷ் குமார் கூறினார்.

ராஜேஷ்குமார் சென்ற இடங்களில் எல்லாம் காங்கிரஸ் வட்டார தலைவர்கள் உள்பட நிர்வாகிகள், செயல்வீரர்கள் மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் வரவேற்பு கொடுத்தனர். இதேபோல் அவர் இன்றும் பல இடங்களில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். கூட்டணி கட்சியினருடன் இணைந்து செயல்படுவதால் அவருக்கு அந்த கட்சிகளின் நிர்வாகிகளும் பம்பரமாக சுழன்று பணியாற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story