ஆனைக்கட்டி பகுதியில் மலைவாழ் மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தருவேன்; கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பையா கவுண்டர்


கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பையா கவுண்டர் வாக்கு சேகரித்த போது
x
கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பையா கவுண்டர் வாக்கு சேகரித்த போது
தினத்தந்தி 29 March 2021 6:45 AM IST (Updated: 29 March 2021 6:38 AM IST)
t-max-icont-min-icon

தமிழக சட்டமன்ற தேர்தலில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தி.மு.க வேட்பாளர் பையா கவுண்டர் (எ) ஆர்.கிருஷ்ணன் போட்டியிடுகிறார்.

அவர் நேற்று பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் 24 வீரபாண்டி ஊராட்சிக்குட்பட்ட, ஆனைகட்டி, சேம்புக்கரை, காட்டுச்சாலை, தூம்மனூர், கொண்டனூர், கொண்டனூர்புதூர், ஆலமரமேடு, பனப்பள்ளி, வடக்காலூர், தெக்காலூர், தூவைபதி, ஜம்புகண்டி ஆகிய பல்வேறு மலைவாழ் கிராமங்களில் பொதுமக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது, தி.மு.கழக ஆட்சி அமைந்து தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆனதும் மலைவாழ் கிராமங்களுக்கு தார்சாலை, வீடு இல்லாதவர்களுக்கு வீடு, யானை பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு, குடிநீர் வசதி, தடுப்பணைகள், மின்சார வசதி, தரைப்பாலங்கள் போன்ற அனைத்து வசதிகளையும் செய்து தருவேன் என்று வாக்குறுதி அளித்தார்.

இந்நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் டி.பி.சுப்பிரமணியம், சி.வி.தங்கவேலு, தம்பி வினோத், தி.மு.க காரமடை மேற்கு ஒன்றிய செயலாளர் சுரேந்திரன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ஆனைகட்டி மதன், சிவக்குமார், ஆனந்தகுமார், பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணகுமார் மற்றும் அரசூர் பூபதி, சிங்கை ரவிச்சந்திரன், 24 - வீரபாண்டி ஊராட்சி மன்றத் தலைவர் பழனிச்சாமி, ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள் செல்வராஜ், திருநாவுக்கரசு, அருள்காந்தி, வார்டு உறுப்பினர்கள் மோகன், செல்வன், 
மூர்த்தி மற்றும் செல்வராஜ், மருதமணி, நாகராஜ், விஜயகுமார், ஆனந்தன், மணிகண்டன், சூரியன் தம்பி, பாலா, பிரபாவதி, செல்வராணி, ஜெகன், அசோக் மற்றும் காங்கிரஸ் கட்சியின் பழனிச்சாமி, மோகன்ராஜ், கோபால் மற்றும் ம.தி.மு.க குடை முத்துச்சாமி, தடாகம் ராயப்பன், திராவிட சக்தி, சரவணன், விஸ்வராஜ், சி.பி.எம் கேசவமணி, பழனிச்சாமி, மோகன்ராஜ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ராகவன், விவேக், விமல், குமார், சூர்யா, சரண்பகதூர் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், மற்றும் திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story