கோவையில் 180 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


கோவையில் 180 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 29 March 2021 6:57 AM IST (Updated: 29 March 2021 6:59 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் 180 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

கோவை,

கோவை மாவட்டத்தில் நேற்று மட்டும் 180 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58 ஆயிரத்து 258 ஆக உயர்ந்து உள்ளது.

 கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 101 பேர் நேற்று குணமடைந்தனர். கோவையில் இதுவரை 56 ஆயிரத்து 397 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளனர். 

மேலும் 1,172 பேர் கொரோனா தொற்று சிகிச்சையில் உள்ளனர். கோவை மாவட்டத்தில் நேற்று மட்டும் 2,590 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 75 ஆயிரத்து 931 பேர் கொரோனா தடுப்பூசி போட்டு உள்ளனர்.



Next Story