திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க.வேட்பாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.விற்கு கல்லூரி மாணவர்கள் ஆதரவு
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா போட்டியிடுகிறார்.
அவர் கிராமம், கிராமமாக சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார் இந்த நிலையில்நேற்றுதிருப்பரங்குன்றம் தொகுதிஅதிமுக தேர்தல் அலுவலகத்திற்கு திருப்பரங்குன்றம் தொகுதியைச் சேர்ந்தகல்லூரி மாணவர்கள்ஏராளமானோர்திரண்டு வந்தனர்.
அப்போது அவர்கள் “எங்கள்தலைவர் எடப்பாடி, நாங்கள் வருவோம் உங்களைத் தேடி“, “அரியர் இல்லை எங்களுக்கு, எங்கள் வாக்கு உங்களுக்கு“, “இரட்டை இலை எங்கள் சொத்து“, எடப்பாடி தான் எங்கள் கெத்து “,எடப்பாடி எங்கள் தலைவரு எங்களுக்கு இல்லை அரியரு.... ஆகிய வாசகங்கள் கொண்ட பதாகைகள் ஏந்தி வந்தனர். பின்னர் அவர்கள் அ.திமு.க. வேட்பாளர் ராஜன் செல்லப்பா எம் எல் ஏ வை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவை தெரிவித்தனர். மேலும் அவர்கள் உலகத்தையே உலுக்கிய கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு அமலில் இருந்தது. அதனால் பள்ளி
கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இந்த சூழ்நிலையில் மாணவர்களின் மன உளைச்சலை போக்கும் விதமாக அரியர்ஸ் மாணவர்கள் உள்பட அனைவரும் ஆல்பாஸ் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தது என் போன்ற ஏராளமான மாணவர்களுக்கு பால் வார்த்தது போலஇருந்தது. அதற்கு நன்றி செலுத்தும் பொருட்டு 18 வயது நிரம்பியபுதிய வாக்காளர்களான நாங்கள்முதல்முதலில்வாக்களிக்கப் போகிறோம். அது இரட்டை இலைக்கு போடப் போகிறோம் என்று கூறினார்கள். மேலும் அவர்கள் அரியர் மாணவர்களை பாஸ் என அறிவித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், அ.தி.மு.க வேட்பாளரான ராஜன் செல்லப்பா எம் எல் ஏவிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.ராஜன் செல்லப்பா எம்எல்ஏ மாணவர்கள் அனைவரையும் அரவணைத்து தனக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு நன்றி என்று கூறினார். மாணவர்கள் அனைவரும் கரவொலி எழுப்பினார்கள்.
இந்த நிகழ்ச்சியில்மதுரை புறநகர் கிழக்கு எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன்,எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர்ஒ.எம்..கே.சந்திரன், மாவட்ட துணை செயலாளர் முத்துக்குமார், பகுதி செயலாளர் பன்னீர்செல்வம்,பகுதி துணை செயலாளர் செல்வகுமார், இளைஞரணி பகுதிசெயலாளர் பாலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story