மாணவர்களின் கல்வி கடன் ரத்து செய்ய இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு அளிக்குமாறு சாத்தூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் பேச்சு


மாணவர்களின் கல்வி கடன் ரத்து செய்ய இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு அளிக்குமாறு சாத்தூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் பேச்சு
x
தினத்தந்தி 29 March 2021 10:00 AM IST (Updated: 29 March 2021 9:57 AM IST)
t-max-icont-min-icon

மாணவர்களின் கல்வி கடன் ரத்து செய்ய இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு அளிக்குமாறு அ.தி.மு.க வேட்பாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் கேட்டுக்கொண்டார்.

சாத்தூர் சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் இரட்டை இலை சின்னத்திற்கு சாத்தூர் ஒன்றிய பகுதியான மஞ்சளோடை ப்பட்டி, புல்லக் கவுண்டன்பட்டி , கொம்மிங் கியாபுரம், கீழசெல்லையாபுரம், அன்பின்நகரம், எழுமிச்சங்காய்பட்டி, தூங்காரெட்டிபட்டி, ஏழாயிரம் பண்ணை, ரெட்டியாபட்டி உட்பட அனைத்து கிராமங்களிலும் வாக்கு சேகரித்த போது பேசுகையில்

அனைத்து கிராமங்களிலும் தங்குதடையின்றி குடிநீர், சாலை வசதி செய்துதர நடவடிக்கை எடுப்பேன். பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன். முதல்வர் எடப்பாடியாரின் நல்ல ஆட்சி தொடர, மக்களுக்கு நல்ல திட்டங் களை மீண்டும் வழங்கிட, குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1500 வழங்கிடவும், அனைத்து குடும்ப அட்டைதாரருக்கும் விலையில்லா வாஷிங்மிஷன்,சோலார் சமையல் அடுப்பு வழங்கிட, சொந்த வீடு இல்லாதவர் களுக்கு இடம் வாங்கி வீடு கட்டிதர, மகளிர்சுய உதவிக் குழுக் கடன், விவசாய நகைக் கடனை தொடர்ந்து, மாணவர்களின் கல்வி கடன் ரத்து செய்ய, வீட்டில் ஒருவருக்கு அரசுபணி வழங்கிட, வருடத்திற்கு 6 சிலிண்டர் இலவசமாக வழங்கிட, இலவச அரசு கேபிள் இணைப்பு வழங்கிட இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து ஆர்.கே.ரவிச்சந்திரன் ஆன என்னை வெற்றிபெற செய்யுமாறு கேட்டு கொண்டார். செல்லும் கிராமங்களில் எல்லாம் பொதுமக்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர்.

இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க கழக நிர்வாகிகள், தொண் டர்கள். பாரதிய ஜனதா கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், பட்டாளி மக்கள் கட்சி, உள்ளிட்ட கூட்டணி கட்சி நகர, ஒன்றிய கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Next Story