மதுரைக்கு எய்ம்ஸ்-ஸ்மார்ட் சிட்டி கொண்டு வந்த எனக்கு வாக்களியுங்கள்; மதுரை கிழக்கு தொகுதி மக்களிடம் ஆர்.கோபாலகிருஷ்ணன் வாக்கு சேகரிப்பு
மதுரை கிழக்குத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.கோபாலகிருஷ்ணன் தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
நேற்று கருப்பாயூரணி, ஒத்தப்பட்டி, வீரபாஞ்சான், விளத்தூர், பொட்டல் பனையூர், உறங்கான்பட்டி, வரிச்சியூர், வைத்தியநாதபுரம், குன்னத்தூர் புதூர், ஆளவந்தான், களிமங்கலம், நாட்டார்மங்கலம், மேலவடக்கூர், அங்காடி மங்கலம் என 20&க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீதி, வீதியாக சென்று இரட்டை சிலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவரை அங்குள்ள பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
அப்போது அவர் கூறியதாவது,
மக்களுக்கு சேவை செய்கின்ற ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான். எனவே தான் அம்மா என்னை மதுரை நாடாளுமன்ற வேட்பாளராக தேர்வு செய்து மதுரை மக்களுக்கு சேவை செய்ய அனுப்பி வைத்தார். அதன் மூலம் நான் மதுரை மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். அதில் குறிப்பாக மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர 2019&ல் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தேன். அதன்பின்னர் தான் பிரதமர் மோடி மதுரைக்கு நேரில் வந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.பின்னர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முதலில் சென்னை, கோவை மாநகராட்சிகள் தான் தேர்வு செய்யப்பட்டன. என்னை தேர்ந்தெடுத்த மதுரைக்கும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை கொண்டு வர பல்வேறு முயற்சிகள் எடுத்தேன். அதன்பயனாக மத்திய அரசு 3 கட்டமாக மதுரைக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை கொண்டு வந்தது. அதன் மூலம் மதுரை பெரியார் பஸ்நிலையம், மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றிலும் டைல்ஸ் கற்கள், எல்.இ.டி.விளக்குகள், மல்டிலெவல் வாகன நிறுத்துமிடம், வைகை ஆற்றின் கரையில் சாலை வசதி என ஆயிரம் கோடி ரூபாயில் பணிகள் நடந்து வருகிறது. இவ்வாறு நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து மதுரைக்கு கொண்டு வந்த திட்டங்களை பட்டியலிட முடியும். ஆனால் தற்போது உள்ள எம்.எல்.ஏ. கிழக்கு தொகுதிக்கு என்னென்ன திட்டங்களை கொண்டு வந்தார் என்று பட்டியலிட முடியுமா.
எனவே கிழக்கு தொகுதி மக்கள் நீங்கள் என்னை மீண்டும் உங்கள் தொகுதிக்கு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுத்தால் பல்வேறு திட்டங்களை கொண்டு வருவேன். நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்தது போன்று என்னை மீண்டும் கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக நீங்கள் தேர்வு செய்தால் தொகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், அரசின் நலத்திட்டங்களை உங்கள் வீடு தேடி வரும் வகையில் செயலாற்றுவேன். ஆகவே உங்கள் வீட்டு பிள்ளையான எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என்றார்.
Related Tags :
Next Story