நாமக்கல்லில் தபால் வாக்குகளை பதிவு செய்த போலீசார்
நாமக்கல்லில் தபால் வாக்குகளை பதிவு செய்த போலீசார்
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் போலீசார், முன்னாள் படைவீரர்கள், ஊர்க்காவல் படை வீரர்கள் என மொத்தம் 1,900 பேர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களில் சுமார் 950 போலீசாருக்கு தபால் ஓட்டு போடுவதற்கான படிவம் வழங்கப்பட்டு உள்ளது.
இவர்கள் தங்களது தபால் ஓட்டுகளை போடுவதற்கு நேற்று நாமக்கல் ஆயுதப்படை சமுதாய கூடத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதையொட்டி அங்கு ஏற்படுத்தப்பட்டு இருந்த அட்டை மறைவில் தங்களது வாக்குகளை பதிவு செய்த வாக்குச்சீட்டுகளை போலீசார் சீல் வைக்கப்பட்ட பெட்டியில் போட்டனர்.
=======
Related Tags :
Next Story