ராஜாமடம் பகுதியில் புதிய தடுப்பணை கட்டப்படும்; பட்டுக்கோட்டை தொகுதி த.மா.கா. வேட்பாளர் என்.ஆர்.ரெங்கராஜன் உறுதி


ராஜாமடம் பகுதியில் புதிய தடுப்பணை கட்டப்படும்; பட்டுக்கோட்டை தொகுதி த.மா.கா. வேட்பாளர் என்.ஆர்.ரெங்கராஜன் உறுதி
x
தினத்தந்தி 29 March 2021 11:30 AM IST (Updated: 29 March 2021 11:19 AM IST)
t-max-icont-min-icon

பட்டுக்கோட்டை அருகே ராஜாமடம் பகுதியில் புதிய தடுப்பணை கட்டப்படும் என்று த.மா.கா. வேட்பாளர் என்.ஆர்.ரெங்கராஜன் உறுதி அளித்தார்.

என்.ஆர்.ரெங்கராஜன் பிரசாரம்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோடடை சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. வேட்பாளர் என்.ஆர்.ரெங்கராஜன் போட்டியிடுகிறார். அவர் பட்டுக்கோட்டை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார். செல்லும் இடங்களில் பொதுமக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்படி நேற்று அவர் பட்டுக்கோட்டை தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பழஞ்சூர், மிலாரிகாடு, புதுக்கோட்டை உள்ளூர், வள்ளிகொல்லைக்காடு, பேய்கிளிகாடு, நரசிங்கபுரம், சுந்தரநாயகிபுரம், ஏரிப்புறக்கரை, ராஜாமடம், கீழத்தோட்டம் ஆகிய கிராமங்களில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.

புதிய தடுப்பணை
அதனைத்தொடர்ந்து மகிழங்கோட்டை, தொக்காலிக்காடு, மாளியக்காடு, சேண்டாக்கோட்டை, பள்ளிகொண்டான், முதல்சேரி ஆகிய பகுதிகளில் வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் ராஜாமடம் பகுதிகளில் புதிய தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பல்வேறு கிராமங்களில் சமுதாயக் கூடங்கள் அமைக்கப்படும் என்று உறுதியளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ. சி.வி.சேகர், முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், மலைஅய்யன், ஒன்றிய செயலாளர் கல்யாணசுந்தரம், பாரதீய ஜனதா கட்சி சார்பில் முரளி கணேஷ், அன்பு, த.மா.கா. சார்பில் வைத்திலிங்கம், பழனிவேல், நடராஜன், அருண் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.

Next Story