என்.பி.கே.ஆர்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் தொடங்குவதற்கு நடவடிக்கை காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.ராஜகுமார் வாக்குறுதி


என்.பி.கே.ஆர்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் தொடங்குவதற்கு நடவடிக்கை காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.ராஜகுமார் வாக்குறுதி
x
தினத்தந்தி 29 March 2021 5:47 PM IST (Updated: 29 March 2021 5:47 PM IST)
t-max-icont-min-icon

புதிய தொழில் நுட்பத்துடன் என்.பி.கே.ஆர்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்று காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.ராஜகுமார் தேர்தல் பிரசாரத்தில் வாக்குறுதி அளித்துள்ளார்.

மயிலாடுதுறை, 

மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.ராஜகுமார் குத்தாலம் ஒன்றியம் சேத்திரபாலபுரம் ஊராட்சியில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறுகையில், மூடப்பட்ட மயிலாடுதுறை தலைஞாயிறு என்.பி.கே.ஆர்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அதிக அளவில் கடன் உள்ளது.  அங்குள்ள எந்திரங்களும் பயன்படுத்த முடியாத நிலையில் பழுதடைந்து விட்டன. மயிலாடுதுறை பகுதி 
விவசாயிகளின் நலன் கருதி புதிய தொழில் நுட்பத்துடன் என்.பி.கே.ஆர்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் தொடங்குவதற்கு உரிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என்றார்.

தொடர்ந்து குத்தாலம் பேரூராட்சி மற்றும் கடலங்குடி, வானதிராஜபுரம், ஆலங்குடி, வில்லியநல்லூர், திருமணஞ்சேரி ஆகிய ஊராட்சிகளில் வேட்பாளர் ராஜகுமார் வாக்கு சேகரித்தார். அப்போது அவருடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Next Story