கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்குச்சாவடி மைய அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி கலெக்டர் கிரண்குராலா ஆய்வு


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்குச்சாவடி மைய அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி கலெக்டர் கிரண்குராலா ஆய்வு
x
தினத்தந்தி 29 March 2021 9:55 PM IST (Updated: 29 March 2021 9:55 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்குச்சாவடி மைய அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கிரண்குராலா நேரில் ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சி

2-ம் கட்ட பயிற்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம், சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் 1,569 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இங்கு தேர்தல் நாளன்று வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் 7,528 பேர் பணிபுரிய உள்ளனர்.  இவர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள், வாக்குப்பதிவை உறுதி படுத்தும் எந்திரங்கள் ஆகியவற்றை பயன்படுத்துவது குறித்த 2-வது கட்ட செயல் விளக்க பயிற்சி நேற்று நடைபெற்றது. 

கலெக்டர் ஆய்வு

கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் பணிபுரிய உள்ள 416 வாக்குச்சாவடி மைய தலைமை அலுவலர்கள் மற்றும் 1,996 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி கள்ளக்குறிச்சி ஏ.கே.டி.அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகா, சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் வளர்மதி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேர்தல் மண்டல அலுவலர்கள் பயிற்சி அளித்தனர். இதை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கிரண்குராலா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.

ரிஷிவந்தியம்,உளுந்தூர்பேட்டை

அதேபோல் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் 374 வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் 1,796 பேருக்கு சங்கராபுரம் ஜோசப் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் 372 வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் 1,784 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு சங்கராபுரம் ஜெயம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியில் 407 வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் 1,952 பேருக்கு உளுந்தூர்பேட்டை பெஸ்கி மேல்நிலைப்பள்ளியிலும் பயற்சி நடைபெற்றது.

Next Story