பொதுமக்கள் வசதிக்காக தனித்தனியே 2 சட்டமன்ற அலுவலகம் கட்டப்படும் த.மா.கா. வேட்பாளர் தர்மராஜ் வாக்குறுதி
லால்குடி, புள்ளம்பாடி ஒன்றியங்களில் பொதுமக்கள் வசதிக்காக தனித்தனியே 2 சட்டமன்ற அலுவலகம் கட்டப்படும் த.மா.கா. வேட்பாளர் தர்மராஜ் வாக்குறுதி.
லால்குடி,
திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதி அ.தி.மு.க. கூட்டணி த.மா.கா. வேட்பாளர் தர்மராஜ் அலங்காநல்லூர், கீழ்மாரிமங்கலம், நெய்குப்பை, மகிழம்பாடி, புதூர் உத்தமனூர், உள்ளிட்ட லால்குடி வடக்கு ஒன்றிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசும்போது, “லால்குடி தொகுதியில் லால்குடி, புள்ளம்பாடி என 2 ஒன்றியங்களும், 78 ஊராட்சிகளும் உள்ளன. இப்பகுதி பொதுமக்களின் சாலை, மின்சாரம், குடிநீர், சுகாதாரம் மற்றும் வேளாண்மை, சமூகநலத்துறை, வட்ட வழங்கல்துறை, வருவாய்த்துறை, உள்ளிட்டவைகளில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வுகான தனித்தனியே லால்குடி, புள்ளம்பாடி ஒன்றியங்களில் 2 சட்டமன்ற அலுவலகம் கட்டப்படும். தனியார் கட்டிடத்தில் இயங்கி வரும் கோர்ட்டு, துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், சார்-பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களை ஒன்றிணைத்து அதற்கான இடம் தேர்வு செய்து அரசு ஒருங்கிணைந்த அலுவலக கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுப்பேன்” என்றார்.
பிரசாரத்தின்போது லால்குடி ஒன்றிய செயலாளர்கள் வடக்கு வக்கீல் அசோகன், தெற்கு சூப்பர் நடேசன், த.மா.கா. ஒன்றிய செயலாளர் சிவராமன், அ.தி.மு.க. மாவட்ட இணைச்செயலாளர் ரீனாசெந்தில், கூட்டுறவு சங்க தலைவர்கள் நன்னிமங்கலம் ஆறுமுகம், நகர் ராஜாராம், பெருவளநல்லூர் கேசவன், உள்ளிட்ட அ.தி.மு.க., த.மா.கா., பா.ஜ.க., பா.ம.க. கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு பிரசாரம் செய்தனர்.
Related Tags :
Next Story